ஆவின் நிறுவன மேலாளரை தாக்கிய டிரைவர் கைது


ஆவின் நிறுவன மேலாளரை தாக்கிய டிரைவர் கைது
x

வேலூர் சத்துவாச்சாரி ஆவின் நிறுவன மேலாளரை தாக்கிய டிரைவர் கைது செய்யப்பட்டார்.

வேலூர்

வேலூர் சத்துவாச்சாரி தென்றல்நகரை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 33). இவர் சத்துவாச்சாரி ஆவின் நிறுவன மேலாளராக (என்ஜினீயரிங் பிரிவு) பணிபுரிந்து வருகிறார். ஆவின் நிறுவனத்தில் இருந்து ஒப்பந்த அடிப்படையில் பல்வேறு வேன்களில் பால் பாக்கெட்டுகள் எடுத்து செல்லப்பட்டு கடைகள், முகவர்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.

சத்துவாச்சாரி வெள்ளாளர் தெருவை சேர்ந்த ஜெகதீஷ் (23) ஒப்பந்த வேன் டிரைவராக பணிபுரிந்து வந்தார். அவர் அடிக்கடி மதுஅருந்தி விட்டு வேலைக்கு வந்தாகவும், கனகராஜ் இதுகுறித்து ஒப்பந்ததாரரிடம் புகார் தெரிவித்ததாகவும், அதனால் ஒப்பந்ததாரர் டிரைவர் ஜெகதீசை அழைத்து கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி இரவு 8 மணியளவில் பணிமுடிந்து வெளியே வந்த கனகராஜிடம் திடீரென ஜெகதீஷ் தகராறில் ஈடுபட்டு தாக்கி உள்ளார். இதில் காயம் அடைந்த கனகராஜ் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து அவர் சத்துவாச்சாரி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் வழக்குப்பதிந்து ஜெகதீசை கைது செய்தார்.


Next Story