தனியார் நிறுவனத்தில் பூட்டை உடைத்து பொருட்களை திருடியவர் கைது


தனியார் நிறுவனத்தில் பூட்டை உடைத்து பொருட்களை திருடியவர் கைது
x

நெல்லை அருகே தனியார் நிறுவனத்தில் பூட்டை உடைத்து பொருட்களை திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

நெல்லை அருகே உள்ள கங்கைகொண்டான் மாசிலாமணிநகரை சேர்ந்தவர் ராம்குமார் சைமன் (வயது 56). இவர் கங்கைகொண்டான், சிப்காட்டில் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். கடந்த 9-ந்தேதி கம்பெனியை பூட்டிவிட்டு நேற்று காலை திரும்பி வந்து பார்த்தார். அப்போது கம்பெனியின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த 3 கட்டிங் எந்திரங்கள், காப்பர் வயர் மற்றும் சில பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.

இதுகுறித்து ராம்குமார் சைமன், கங்கைகொண்டான் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் சுதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் வெங்கடாசலபுரம், குத்தாலப்பேரி தெருவை சேர்ந்த முருகன் (30) என்பவர் பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து முருகனை போலீசார் நேற்று கைது செய்தனர். திருடி சென்ற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story