கேரளாவுக்கு கடத்துவதற்காக வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது

கேரளாவுக்கு கடத்துவதற்காக  வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது
x

கேரளாவுக்கு கடத்துவதற்காக வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது

திருநெல்வேலி

உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் நேற்று சாம்பவர்வடகரை அருகே உள்ள ஊர்மேலழகியான் வேலாயுதபுரத்தைச் சேர்ந்த மதியழகன் (வயது43) என்பவரது வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு கேரளாவிற்கு கடத்துவதற்காக 1,050 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் மதியழகனை கைது செய்தனர்.

Next Story