அனுமதியின்றி பட்டாசு தயாரித்தவர் கைது


அனுமதியின்றி பட்டாசு தயாரித்தவர் கைது
x

அனுமதியின்றி பட்டாசு தயாரித்தவரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர்

தாயில்பட்டி,

தாயில்பட்டி அருகே உள்ள மேல கோதைநாச்சியார்புரத்தில் வீட்டில் அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பதாக வெம்பக்கோட்டை போலீசருக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில் வீடுகளில் சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி சோதனை செய்தார். அப்போது நடுத்தெருவை சேர்ந்த சுரேஷ் (வயது 32) என்பவர் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி, சுரேசை கைது செய்து அவரிடம் இருந்த 20 கிலோ சோல்சா வெடிகளை பறிமுதல் செய்தார்.


Related Tags :
Next Story