கொலை வழக்கில் கைதான2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
தூத்துக்குடியில் கொலை வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
தூத்துக்குடி தாளமுத்துநகர் டி.சவேரியார்புரத்தை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் செண்பகராஜ் (வயது 24). இவர் ஒரு கொலை வழக்கில் தாளமுத்துநகர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதே போன்று முத்தையாபுரம் திருமாஜிநகரை சேர்ந்த ஜான்ராஜ் மகன் இம்மானுவேல் என்ற அப்துல்லா (32) என்பவரை, அவரது மனைவியை கொலை செய்த வழக்கில் முத்தையாபுரம் போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், செண்பகராஜ், இம்மானுவேல் என்ற அப்துல்லா ஆகியோரை கைது செய்ய உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாளையங்கோட்டை ஜெயிலில் வழங்கினர். நடப்பு ஆண்டில் இதுவரை 270 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.