கொலை வழக்கில் கைதான வடமாநில தொழிலாளி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


கொலை வழக்கில் கைதான  வடமாநில தொழிலாளி மீது   குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 21 Nov 2022 12:15 AM IST (Updated: 21 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டையில் வாலிபர் கொலை வழக்கில் கைதான வடமாநில தொழிலாளி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

தூத்துக்குடி

புதுக்கோட்டையில் வாலிபர் கொலை வழக்கில் கைதான வடமாநில தொழிலாளி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

வாலிபர் கொலை

புதுக்கோட்டை பாத்திமாநகர் பகுதியில் தங்கி இருந்த ஒடிசா மாநிலம் கஞ்சம் பகுதியை சேர்ந்த கந்தப் பெஹரா மகன் துஷாபந்த் பெஹரா (வயது 25) என்பவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், அவருடன் தங்கி இருந்த மேற்கு வங்க மாநிலம் காரக்பூர் பகுதியை சேர்ந்த சத்ய பிரகாஷ் பால் மகன் எர்னஸ்ட் பால் (42) என்ற தொழிலாளி புதுக்கோட்டை போலீசார் கைது செய்தனர்.

இதனை தொடர்ந்து அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தார்.

குண்டர் சட்டம்

அதன்பேரில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீ்ழ் எர்னஸ்ட் பால் என்பவரை கைது செய்ய உத்தாரவிட்டர். இநத உத்தரவு நகலை புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி பாளையங்கோட்டை ஜெயிலில் வழங்கினார். நடப்பு ஆண்டில் இதுவரை போக்சோ வழக்குகளில் சம்பந்தப்பட்ட 14 பேர் மற்றும் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 42 பேர் உள்பட 251 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர்.


Next Story