போக்சோ வழக்கில் கைதானவர் தற்கொலை
போக்சோ வழக்கில் கைதானவர் தற்கொலை
விருதுநகர்
விருதுநகர்
விருதுநகர் புல்லலக்கோட்டை ரோட்டை சேர்ந்தவர் மாரிக்கனி(வயது 43). இவரது மகன் தங்க முனீஸ்வரன்(20). சுமைதூக்கும் தொழிலாளியான தங்கமுனீஸ்வரன் விருதுநகரை சேர்ந்த 17 வயது பெண்ணை காதலித்து வந்த நிலையில் இதுதொடர்பாக போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது விடுவிக்கப்பட்டு வீட்டிலிருந்து வந்தார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான தங்கமுனீஸ்வரன் மன உளைச்சல் காரணமாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்த நிலையில் சம்பவத்தன்று பெற்றோர் கோவிலுக்கு சென்று விட்ட நிலையில் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது பற்றி மாரிக்கனி கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Related Tags :
Next Story