போக்சோ வழக்கில் கைதானதொழிலாளிக்கு ஆயுள் தண்டனை


தினத்தந்தி 18 March 2023 12:15 AM IST (Updated: 18 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக போக்சோ வழக்கில் கைதான கூலித் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி கோர்ட்டில் வௌ்ளிக்கிழமை தீர்ப்பு கூறப்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக போக்சோ வழக்கில் கைதான கூலித் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி கோர்ட்டில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

கூலித் தொழிலாளி

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் ஏ.கோவில்பத்தை சேர்ந்தவர் தங்கவேல். இவருடைய மகன் கண்ணன் (வயது 43). கூலித் தொழிலாளி. இவர் கடந்த 24.6.2015 அன்று 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தாராம். இது குறித்த புகாரின் பேரில் செய்துங்கநல்லூர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, கண்ணனை கைது செய்தனர்.

ஆயுள் தண்டனை

இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன் குற்றம் சாட்டப்பட்ட கண்ணனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசுந்தர், போலீஸ்காரர் செல்வக்குமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மகேசுவரி ஆகியோரை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பாராட்டினார்.


Next Story