வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது


வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
x

குற்ற வழக்குகளில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

வேலூர்

லத்தேரி காலனி பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் சதீஷ் (வயது 33). வழிப்பறி, கொலை முயற்சி வழக்குகளில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் சதீஷை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டார்.


Next Story