உப்பு சத்தியாகிரக பாதயாத்திரை குழுவினர் வருகை


உப்பு சத்தியாகிரக பாதயாத்திரை குழுவினர் வருகை
x
தினத்தந்தி 30 April 2023 12:15 AM IST (Updated: 30 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வேதாரண்யத்துக்கு உப்பு சத்தியாகிரக பாதயாத்திரை குழுவினர் வந்தனர்.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

உப்பு சத்தியாகிரக போராட்டத்தின் நினைவு தினத்தையொட்டி உப்பு சத்தியாகிரக நினைவு பாதயாத்திரை குழுவினர் கடந்த 14-ந் தேதி திருச்சியில் இருந்து புறப்பட்டனர். இந்த குழுவினர் தஞ்சை, கும்பகோணம், நீடாமங்கலம், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி வழியாக வந்து வேதாரண்யத்திற்கு நேற்று காலை வந்தடைந்தனர். பின்னர் பாதயாத்திரை குழுவினர் வேதாரண்யம் வடக்கு வீதியில் அமைந்துள்ள உப்பு சத்தியாகிரக நினைவு கட்டிடத்தில் முன்னாள் எம்.பி. பி.வி. ராஜேந்திரன், சுதந்திர போராட்ட தியாகி சர்தார் வேதாரத்தினத்தின் பேரன் கயிலைமணி வேதாரத்தினம் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் ராட்டையை சுற்றியும் தேசபக்தி பாடல்களை பாடி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். இந்த குழுவினர் இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணி அளவில் வேதாரண்யத்தில் இருந்து ஊர்வலமாக அகத்தியன்பள்ளியில் அமைந்துள்ள உப்பு சத்தியாகிரக நினைவு ஸ்தூபிக்கு சென்று உப்பு அள்ளுகின்றனர


Next Story