பாதுகாப்பு பணிக்கு தாமதமாக வந்த13 போலீசார் இடமாற்றம்
பாதுகாப்பு பணிக்கு தாமதமாக வந்த 13 போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டனா்.
ஈரோடு
ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள சித்தோடு நால்ரோடு பகுதியில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பாதுகாப்பு பணிக்காக காலை 6 மணிக்கு அங்கு செல்ல வேண்டும் என்று கோபி மற்றும் பெருந்துறை உட்கோட்டத்தில் பணியாற்றும் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது.
இதில் 13 போலீசார் தாமதமாக வந்துள்ளனர். இதைத்தொடர்ந்து தாமதமாக பணிக்கு வந்த 13 பேரையும் ஆனைக்கல்பாளையம் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து, போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவிட்டார். அதன் பேரில் 13 போலீசாரும் ஆனைக்கல்பாளையம் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
Related Tags :
Next Story