பெங்களூருவை சேர்ந்தவர் எரித்துக்கொலை


பெங்களூருவை சேர்ந்தவர் எரித்துக்கொலை
x

தளி அருகே பெங்களூருவை சேர்ந்தவா் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை

தளி அருகே பெங்களூருவை சேர்ந்தவா் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆண் பிணம்

கிருஷ்ணகிரி மாவட்டம் தளியில் இருந்து தேன்கனிக்கோட்டை செல்லும் சாலையில் உள்ள ஒசபுரம் பஸ் நிறுத்தம் பின்புறம் உள்ள தைல மரதோப்பில் தீயில் பாதி எரிந்த நிலையில் ஆண் பிணம் கிடந்தது. இது குறித்து தளி கிராம நிர்வாக அலுவலர் மாயகண்ணன் தளி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது அந்த நபர் கர்நாடக மாநிலம் பெங்களூரு ஜெய் நகரை சேர்ந்த சுரேஷ்பாபு என்பது தெரியவந்தது. இவரை மர்ம நபர்கள் காரில் கடத்தி வந்து பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்து கொலை செய்தது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

போலீஸ் தனிப்படை

இதையடுத்து போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்த தளி போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Next Story