நெக்னாமலை காடுகளில் மர்ம நபர்கள் தீவைப்பு


நெக்னாமலை காடுகளில் மர்ம நபர்கள் தீவைப்பு
x

நெக்னாமலை காடுகளில் மர்ம நபர்கள் தீவைத்ததால் மரங்கள் எரிந்து நாசமாயின.

திருப்பத்தூர்

ஆலங்காயம் ஒன்றியத்திற்குட்பட்ட நெக்னாமலை ஊராட்சி பகுதியில் உள்ள காடுகளில் நேற்று பிற்பகல் 3 மணி அளவில் மர்ம நபர்கள் தீவைத்துள்ளனர். தீயை உடனடியாக அணைக்க வனத்துறையினர் முன்வராததால், தொடர்ந்து காட்டுத்தீ மளமளவென பரவி இரவு 9 மணி வரை தொடர்ந்து எரிந்து கொண்டே இருந்தது.

இந்த மலை மீது கிராமம் உள்ளது. அங்கு 600-க்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் பாதுகாப்புக்கு தற்போது அச்சம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த தீ விபத்தில் மரங்கள், மூலிகை செடிகள் எரிந்து சாம்பலானது. கடந்த வாரம் மாதகடப்பா மலைப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டு காடுகளில் இருந்த மரங்கள் எரிந்து சாம்பலானது. தற்போது மேலும் மற்றொரு பகுதியான நெக்னா மலைப்பகுதி எரிந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வனத்துறையினர் வனப்பகுதியை காக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story