2 வீடுகளுக்கு தீ வைப்பு; போலீசில் புகார்


2 வீடுகளுக்கு தீ வைப்பு; போலீசில் புகார்
x

கல்லக்குடியில் 2 வீடுகளை தீ வைத்து எரித்தது தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி

கல்லக்குடி, ஜூலை.3-

கல்லக்குடியில் 2 வீடுகளை தீ வைத்து எரித்தது தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

காவலாளி

திருச்சி மாவட்டம் கல்லக்குடி அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 55). இவர் தனியார் சர்க்கரை ஆலையில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தாமஸ் மேரி (50). இந்த தம்பதியினருக்கு பெட்ரின்அந்தோணி (33), ஜான்சன் (32), லூயிஸ் எடிசன் (25) ஆகிய மகன்களும், ஏஞ்சலினா (22) என்ற மகளும் உள்ளனர்.

பாஸ்கரன் தம்பி சேகர் அதேபகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அதே தெருவை சேர்ந்த ஞானசேகர் குடும்பத்துக்கும், பாஸ்கர் குடும்பத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, ஞானசேகரின் மகன் பிளம்மிங் ஜோன்ஸ் பஸ்கரின் வீட்டை தீவைத்து கொளுத்தாமல் விடமாட்டேன் என ஆவேசத்துடன் கூறியதாக தெரிகிறது.

பற்றி எரிந்த வீடுகள்

இந்த நிலையில் நேற்று அதிகாலையில் பாஸ்கரின் வீடு தீப்பற்றி எரிந்தது. இதனால் பாஸ்கரின் குடும்பத்தினர் அலறி அடித்தபடி வெளியே ஓடிவந்தனர். இந்த தீ அருகே உள்ள சேகர் வீட்டுக்கும் பரவியது. அங்கிருந்தவர்களும் வெளிேய ஓடி வந்ததால் தப்பினர்.

இதனிடையே சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த புள்ளம்பாடி தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் டால்மியா சிமெண்ட் ஆலை தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீயை மேலும் பரவவிடாமல் தடுத்து அணைத்தனர்.

ரூ.25 லட்சம் சேதம்

எனினும் இந்த விபத்தில் பாஸ்கர் தனது மகள் திருமணத்திற்காக வைத்து இருந்த 10 பவுன் நகை, 2 பீேராக்கள், டி.வி. மற்றும் மகன்கள், மகளின் கல்வி சான்றிதழ்கள், பத்திரம், பிரிஜ், கட்டில் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமாகின. அதேபோல் சேகர் வீடும் தீயில் எரிந்து நாசமாயின. இந்த விபத்தில் ரூ.25 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.

இது குறித்த புகாரின் பேரில் கல்லக்குடி இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மாலதி, சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தகராறின் போது, ஞானசேகர் குடும்பத்தினர் பாஸ்கரின்வீட்டை தீ வைத்து கொளுத்தி விடுவோம் என மிரட்டியுள்னர்.

தீ வைப்பு

இதனால் அவர்கள்தான் தீ வைத்து இருப்பார்கள் என பாஸ்கர் குடும்பத்தினர் போலீசில் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஞானசேகரனின் குடும்பத்தினர்தான் தீ வைத்தார்களா? அல்லது தீ விபத்துக்கு வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story