கலை திருவிழா


கலை திருவிழா
x

கலை திருவிழா

நாகப்பட்டினம்

திருமருகல் வட்டார அளவிலான கலை திருவிழா போட்டிகள் திட்டச்சேரியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் தொடங்கியது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் கலாராணி தலைமை தாங்கினார். இதில் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் சாந்தி கலந்துகொண்டு கலை திருவிழாவை தொடங்கி வைத்தார். புறாக்கிராமம் பள்ளி தலைமை ஆசிரியர் மாணிக்கவாசகம், அம்பல் பள்ளி தலைமை ஆசிரியர் அருள்ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதற்கான ஏற்பாடுகளை வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) சந்தானம் செய்திருந்தார். இதில் 34 வகையான கலை, இலக்கிய, நடனம், பேச்சு உள்ளிட்ட போட்டிகள் 6, 7 மற்றும் 8 -ம் வகுப்புகளுக்கு ஒரு பிரிவாகவும், 9 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கு ஒரு பிரிவாகவும், 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு மற்றொரு பிரிவாகவும் நடக்கிறது. இதில் திருமருகல் ஒன்றியத்துக்குட்பட்ட 13 பள்ளிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் அனைத்து பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story