பள்ளிக்கல்வித்துறை சார்பில் விழுப்புரத்தில் மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் மாணவர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்

பள்ளிக்கல்வித்துறை சார்பில்    விழுப்புரத்தில் மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகள்    மாணவர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்
x
தினத்தந்தி 7 Dec 2022 6:45 PM GMT (Updated: 7 Dec 2022 6:47 PM GMT)

பள்ளிக்கல்வித்துறை சார்பில் விழுப்புரத்தில் மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் மாணவர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்

விழுப்புரம்

விழுப்புரம்,

தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில், மாணவர்களின் கலை திறமைகளை கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சார்பில் வட்டார அளவில் போட்டிகள் நிறைவு பெற்ற நிலையில் மாவட்ட அளவிலான கலை திருவிழா போட்டிகள் நேற்று தொடங்கியது. இதில், மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் பங்கேற்றனர். இந்த போட்டிகள் வருகிற 8-ந்தேதி வரை நடைபெறுகிறது.

இதில், விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடனப் போட்டிகளும், காமராஜ் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் இசை (வாய்ப்பாட்டு), கருவியிசை, மொழித்திறன், தோற்கருவி, துளைக்காற்றுக் கருவி, தந்திக் கருவிகள், இசைச் சங்கமம் ஆகிய போட்டிகளும், விழுப்புரம் சரஸ்வதி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் கவின்கலை, நுண்கலைப் போட்டிகளும், நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் நாடக போட்டிகளும் நடைபெற்றது. இதில் வெற்றி பெறுபவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவார்கள் என்று, கல்வித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

Next Story