கலைத்திருவிழா


கலைத்திருவிழா
x

சிவகாசியில் கலைத்திருவிழா நடைபெற்றது.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி அரசன் கணேசன் கல்வியியல் கல்லூரியில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கிடையேயான கலைத்திருவிழா-2023 என்ற தலைப்பில் நடைபெற்றது. கல்லூரியின் தாளாளர் அசோகன் தலைமை தாங்கினார். இயக்குனர் நந்தநிலா முன்னிலை வகித்தார். முதல்வர் தீபிகாஸ்ரீ வரவேற்றார். இதில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

மாணவ, மாணவிகளுக்கு 10-க்கும் மேற்பட்ட போட்டிகள் நடத்தப்பட்டது. பானைக்கு வண்ணமிடுதல் போட்டியில் அய்யநாடார்-ஜானகி அம்மாள் கல்லூரியும், குழு நடன போட்டியில் காளீஸ்வரி கல்லூரியும், தீ இல்லாத சமையல் போட்டியில் ஸ்ரீகிருஷ்ண சாமி கல்லூரியும், இசைப்பாடல், காகிதகலை அலங்கார போட்டியில் விவேகானந்தா கல்லூரியும், நக அலங்கார போட்டியில் காளீஸ்வரி கல்லூரியும், கோலப்போட்டியில் எஸ்.எப்.ஆர்.பெண்கள் கல்லூரியும், பென்சில் ஓவிய போட்டியில் வி.பி.எம்.எம். கல்லூரியும், மவுன மொழி போட்டியில் அய்யநாடார்-ஜானகி அம்மாள் கல்லூரியும், நடை அணிவகுப்பு போட்டியில் காளீஸ்வரி கல்லூரி வெற்றி பெற்றது.

இதில் அய்யநாடார்-ஜானகி அம்மாள் கல்லூரி முதல் பரிசும், காளீஸ்வரி கல்லூரிக்கு 2-வது பரிசும் வழங்கப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு கல்லூரி நிர்வாகி கிரிதரன் வெற்றி கோப்பைகளை வழங்கினார். முதல்வர் தீபிகாஸ்ரீ நன்றி கூறினார்.


Next Story