கழுகுமலைஅரசு மேல்நிலைப்பள்ளியில் கலைத்திருவிழா
கழுகுமலைஅரசு மேல்நிலைப்பள்ளியில் கலைத்திருவிழா நடந்தது.
கழுகுமலை:
கழுகுமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் கலைத்திருவிழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் சீத்தாமகேஸ்வரி தலைமை தாங்கினார். கயத்தாறு வட்டார கல்வி அலுவலர் விஜயராஜ், வட்டார மேற்பார்வையாளர் சிதம்பரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கயத்தாறு யூனியனுக்கு உட்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகள் ஒயிலாட்டம், கோலாட்டம், குச்சுபுடி, பரதநாட்டியம் மற்றும் இசை, பேச்சுப் போட்டி, ஓவிய போட்டி, கட்டுரை போட்டி உள்ளிட்ட போட்டிகளில் கலந்து கொண்டனர். கலை நிகழ்ச்சிகளும் நடந்தது. விழாவில் பெற்றார் ஆசிரியர் கழக தலைவர் சிவராமன், திருவள்ளுவர் கழக செயலாளர் முருகன் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ராஜகோபால், பால்ச்சாமி, மாரிகனி, கல்யாணசுந்தரம், கருமலைராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.