மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான கலை விழா


மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான கலை விழா
x

கணியம்பாடியில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான கலை விழா நடைபெற்றது.

வேலூர்

கணியம்பாடி வட்டார வள மையத்தில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவை முன்னிட்டு மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான கலை விழா நேற்று நடைபெற்றது. வட்டார வள மைய மேற்பார்வையாளர் தூயவன் தலைமை தாங்கினார். கணியம்பாடி ஒன்றியக்குழு துணைத்தலைவர் கஜேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் விஸ்வநாதன், கணியம்பாடி ஊராட்சி மன்ற தலைவர் செல்விரவி, வட்டார மருத்துவ அலுவலர் துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாற்றுத்திறனாளி நல சிறப்பாசிரியர் ஜோஷ்வா சதீஷ்குமார் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக கணியம்பாடி ஒன்றியக்குழு தலைவர் திவ்யா கமல்பிரசாத் கலந்து கொண்டு பேசினார். இதில் மாற்றுத்திறனாளிகள் மாணவர்களுக்கு நடனம், ஓவியம், பாட்டு உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது. 40 மாணவர்கள் பங்கேற்று தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

இதில் ஆசிரியர் பயிற்றுனர்கள் ரேவதி, பார்த்தீபன், சிறப்பாசிரியர்கள் கீதா, கவுரி, சிவராமன், இயன்முறை மருத்துவர் பாரதிதாசன், சிறப்பு மைய ஆசிரியர்கள் சாந்தி, விஜயா, வட்டார கணக்காளர் ராஜேஷ், இல்லம் தேடி கல்வி ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கியராஜ், கணியம்பாடி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜோதி உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான வட்டார ஒருங்கிணைப்பாளர் முனிராஜ் நன்றி கூறினார்.


Next Story