அரசு மேல்நிலை பள்ளியில் கலைத்திருவிழா


அரசு மேல்நிலை பள்ளியில் கலைத்திருவிழா
x

வள்ளிமலை அரசு மேல்நிலை பள்ளியில் கலைத்திருவிழா நடைபெற்றது.

வேலூர்

தமிழகத்தில் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களின் கலைத்திறனை வெளிப்படுத்தும் விதமாக போட்டிகள் நடத்த பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி கலைத் திருவிழாவில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. காட்பாடி தாலுகா பொன்னையை அடுத்த வள்ளிமலை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் கலைத் திருவிழா நடைபெற்றது. 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு ஓவிய போட்டி, கட்டுரை போட்டி, நாட்டுப்புற நடனம், பறை இசைத்தல், தெருக்கூத்து நாடகம், கும்மி நடனம், கிராமிய நடனம், கதை எழுதுதல் உள்ளிட்ட 12 பாரம்பரிய போட்டிகளில் கலந்துகொண்டு திறமைகளை வெளிப்படுத்தினர்.

நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தரவேல் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக காட்பாடி ஒன்றியக் குழு தலைவர் வேல்முருகன் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மேலாண்மைக் குழு தலைவர் சவுமியா குமார், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story