அரசு பள்ளியில் கலைத் திறன் திருவிழா
ஓட்டப்பிடாரம் அரசு பள்ளியில் கலைத் திறன் திருவிழாவை சண்முகையா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் வட்டார அளவிலான பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கலைத்திறன் திருவிழா வ.உ.சிதம்பரனார் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. நிகழ்ச்சிக்கு எம்.சி.சண்முகையா எம்.எல்.ஏ தலைமை தாங்கி கலைத்திறன் திருவிழாவை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். ஒட்டப்பிடாரம் யூனியன் தலைவர் ரமேஷ் முன்னில வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியை மேரி வரவேற்று பேசினார். விழாவில் வட்டார தொடக்கக்கல்வி அலுவலர்கள் பவணந்திஸ்வரன், சரஸ்வதி, மகாலட்சுமி, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வட்டார வளமைய மேற்பார்வையாளர் வனிதா, புளியம்பட்டி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்கியதாஸ் உட்பட பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story