அரசு ஆஸ்பத்திரியில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை
திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் முயற்சியால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நடந்தது.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் முயற்சியால் மூட்டு மாற்று அறுவை சிகிச்ச நடந்தது. அதைதொடந்து சிகிச்சை அளித்த டாக்டர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
அறுவை சிகிச்சை
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் ஞானசேகரன் (வயது 62) என்பவருக்கு மூட்டு தேய்மானம் கண்டறியப்பட்டது. அதையடுத்து அவருக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் நடந்தது. இதில் டாக்டர்கள் விக்ரமன், ஜெகதீசன், சதிஷ் குமார் மற்றும் செவிலியர்கள் அமுதா, கிரிஸ்டிபா ஆகியோர் அடங்கிய குழு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்தனர்.
பாராட்டு
இ்ந்த அறுவை சிகிச்சையானது சுமார் 2 மணி நேரத்திற்கும் மேல் நடந்தது.
அதையடுத்து டாக்டர்கள் முயற்சியால் வெற்றிகரமாக சிகிச்சை மேற்கொண்ட தலைமை டாக்டர் வெங்கடேசன் பாபு மற்றும் டாக்டர்கள், ஆஸ்பத்திரி ஊழியர்களுக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்தனர்.