செயற்கை சாயம் பூசப்பட்ட 2 டன் ஏலக்காய் பறிமுதல்


செயற்கை சாயம் பூசப்பட்ட 2 டன் ஏலக்காய் பறிமுதல்
x
தினத்தந்தி 7 Jun 2023 10:49 PM IST (Updated: 8 Jun 2023 6:47 AM IST)
t-max-icont-min-icon

போடியில் 2-வது நாளாக நடந்த சோதனையில், செயற்கை சாயம் பூசப்பட்ட 2 டன் ஏலக்காய் பறிமுதல் செய்யப்பட்டது.

தேனி

போடியில் உள்ள ஏலக்காய் தரம் பிரிக்கும் கடைகளில், தேனி மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ராகவன், போடி உணவு பாதுகாப்பு அதிகாரி சரண்யா ஆகியோர் தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். அப்போது செயற்கை சாயம் பூசப்பட்ட 3 டன் ஏலக்காய்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இந்தநிலையில் 2-வது நாளாக நேற்று போடி டி.வி.கே.கே.நகர், சுந்தரபாண்டியன் தெரு உள்ளிட்ட இடங்களில் உள்ள ஏலக்காய் கடைகளில் உணவு பாதுகாப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இதில் செயற்கை சாயம் பூசப்பட்ட 2 டன் ஏலக்காய் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story