இரணியல் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து மேள கலைஞர் தற்கொலை


இரணியல் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து மேள கலைஞர் தற்கொலை
x

இரணியல் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து மேள கலைஞர் தற்கொலை செய்து கொணட்ார்,

கன்னியாகுமரி

திங்கள்சந்தை:

இரணியல் அருகே குமாரபுரம் நெஞ்சந்தி காலனியை சேர்ந்தவர் சேகர். இவருடைய மகன் சஜின் (வயது 24). இவர் சிங்காரி மேளம் இசைக்குழுவில் வேலை செய்து வந்தார். சஜினுக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று மதியம் இவர் மணக்கரையில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் நான்கு வழி சாலை பகுதியில் மதுவில் விஷம் கலந்து குடித்ததாக தெரிகிறது. இதுபற்றி சஜின் தனது உறவினருக்கு செல்போனில் தெரிவித்துள்ளார்.அதைகேட்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் சம்பவ இடத்துக்கு ஓடி வந்து சஜினை மீட்டு தக்கலையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், மேல்சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சஜின் நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தகவல் அறிந்த இரணியல் போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சஜின் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story