பேரூராட்சி பகுதிகளில் விரைவில் 'கலைஞர் உணவகம்' திறக்கப்படும் -அமைச்சர் சக்கரபாணி பேட்டி
பேரூராட்சி பகுதிகளில் விரைவில் 'கலைஞர் உணவகம்' திறக்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
இந்தியாவில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு குறித்து இன்று டெல்லியில் மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் உணவு அமைச்சர்கள் மாநாடு மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தலைமையில் நடைபெற்றது.இதில் தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி கலந்து கொண்டார்.
பின்னர் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆர்.சக்கரபாணி கூறியதாவது ;
உணவுத்துறைக்கான ரூ.2,000 கோடி மானியத்தை விடுவிக்க மத்திய உணவுத்துறை அமைச்சரிடம் வலியுறுத்தி உள்ளோம்.தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல பேரூராட்சி பகுதிகளில் விரைவில் 'கலைஞர் உணவகம்' திறக்கப்படும் .அனைத்து தேர்தல் வாக்குறுதிகளையும் தமிழக அரசு நிறைவேற்றும் என தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story