கலைஞர் தமிழ் சங்க விழா


கலைஞர் தமிழ் சங்க விழா
x

கலைஞர் தமிழ் சங்க ஆண்டு விழா நடைபெற்றது.

சிவகங்கை

காரைக்குடி,

காரைக்குடி கண்ணதாசன் மணி மண்டபத்தில் கலைஞர் தமிழ் சங்கத்தின் சார்பில் 25-ம் ஆண்டு விழா நடைபெற்றது. ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் தலைமை தாங்கினார். தொழிலதிபர் பழ.படிக்காசு முன்னிலை வகித்தார். காரைக்குடி நகர்மன்ற தலைவர் முத்துத்துரை வரவேற்றார். கலைஞர் தமிழ் சங்க நிறுவனர், முன்னாள் அமைச்சர் தென்னவன் தொடக்க உரையாற்றினார். தி.மு.க. செய்தி தொடர்பு இணை செயலாளர் ராஜீவ் காந்தி, டாக்டர் எழிலன் எம்.எல்.ஏ., ராம அன்பழகன் ஆகியோர் திராவிடம் தந்த கொடை என்ற தலைப்பில் பேசினர்.

எம்.எல்.ஏ.க்கள் தமிழரசி ரவிக்குமார், மாங்குடி, முன்னாள் எம்.எல்.ஏ. சுப.துரைராஜ், தி.மு.க. மாவட்ட துணை செயலாளர்கள் சேங்கை மாறன், மணிமுத்து, ஜோன்ஸ் ரூசோ, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நாகனி செந்தில்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இதில், தி.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினர் கரு அசோகன், காரைக்குடி நகர செயலாளர் குணசேகரன், முன்னாள் நகர் மன்ற துணைத்தலைவர் இராகோ அரசு, சாக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் ஆனந்த், கிழக்கு ஒன்றிய செயலாளர் சுப.சின்னத்துரை, கல்லல் கிழக்கு ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், மேற்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட கவுன்சிலர் ராதா பாலசுப்பிரமணியன், சூரக்குடி ஊராட்சிமன்ற தலைவர் முருகப்பன், காரைக்குடி நகர துணை செயலாளர் கண்ணன், தலைமை கழக பேச்சாளர் பிராட்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.



Next Story