கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டம்
திருவாரூரில் கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டத்தை தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தொடங்கி வைத்தார்.
திருவாரூரில் கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டத்தை தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தொடங்கி வைத்தார்.
மகளிர் உரிமை தொகை திட்டம்
தமிழ்நாடு முதல்-அமைச்சர், மு.க.ஸ்டாலின், 1 கோடி பெண்கள் பயன் பெறும் வகையில் காஞ்சிபுரத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தினை நேற்று தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து திருவாரூர் அருகே காட்டூரில் உள்ள கலைஞர் கோட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்ட தொடக்க விழா நடந்தது.
விழாவில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கலந்து கொண்டு கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான வங்கி அட்டையினை வழங்கி திட்டத்தினை தொடங்கி வைத்தார். பின்னர் அந்த வங்கி அட்டையை கொண்டு நடமாடும் ஏ.டி.எம். எந்திரத்தின் மூலம் பெண்கள் ரூ.1000 எடுத்து கொண்டனர்.
2 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டது
அப்போது மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ, எம்.எல்.ஏ.க்கள் பூண்டி கே.கலைவாணன், மாரிமுத்து, மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலசுப்பிரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.விழாவில் திருவாரூர் மற்றும் குடவாசல் வட்டத்திற்குட்பட்ட 2 ஆயிரம் பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் வங்கி அட்டை வழங்கப்பட்டது.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சண்முகநாதன், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் சந்திரா, உதவி கலெக்டர்கள் சங்கீதா (திருவாரூர்), கீர்த்தனாமணி (மன்னார்குடி), மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் கலியபெருமாள், ஒன்றியக்குழு தலைவர்கள்; புலிவலம் தேவா, உமாபிரியா பாலசந்தர், மணிமேகலை முருகேசன், நகர மன்ற தலைவர்கள் புவனப்பிரியா செந்தில், பாத்திமா பஷிரா, ஒன்றியக்குழு துணைத்தலைவர் பாலசந்தர், நகர மன்ற உறுப்பினர்கள் பிரகாஷ், செந்தில், சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.