கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் பதிவேற்றும் முகாம்


கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் பதிவேற்றும் முகாம்
x

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் பதிவேற்றும் முகாமை கலெக்டர் ஆய்வு செய்தார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே உள்ள மடவாளம் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி, மாடப்பள்ளி ஆகிய பகுதிகளில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்களை பதிவேற்றும் முகாம்களை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அகரம் மற்றும் ஜலகம்பாறை ஆகிய பகுதிகளில் விவசாய நிலங்களில் பண்ணை குட்டை பணிகள் நடைபெறுவதை ஆய்வு செய்தார்.

தொடர்ந்து திருப்பத்தூர் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் (மஞ்சள் குடோன்) பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை அனைத்துக் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.


Next Story