கல்லூரிகளுக்கு இடையே கலைத்திறன் போட்டிகள்
கல்லூரிகளுக்கு இடையே கலைத்திறன் போட்டிகள் நடைபெற்றது
காரைக்குடி
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகளுக்கு இடையேயான மாணவ, மாணவிகளின் பல்வேறு கலைத்திறன்களை வெளிக்கொணர அழகு ஆரம் நிகழ்ச்சி அழகப்பா பல்கலைக்கழக பழனியப்ப செட்டியார் கலையரங்கில் 3 நாட்கள் நடைபெற்றது. நிறைவு விழாவிற்கு அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ரவி தலைமை தாங்கினார். பல்கலைக்கழக கலை பண்பாட்டு மையத்தின் இணை ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் வரவேற்றார். துணைவேந்தர் பேசுகையில், மாணவர்கள் கல்வி கற்பதோடு தங்கள் தனித்திறன்களை வெளிப்படுத்துவதற்கு இது போன்ற கலை விழாக்கள் பெரிதும் உதவுகின்றன என்றார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குனர் சீனு ராமசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசுகையில்; வெற்றி, தோல்வி என்பது மாறி மாறி நிகழக்கூடிய ஒன்றாகும். தோல்வியே வெற்றியின் முதல் படியாகும். எனவே மாணவர்கள் போட்டியில் பங்கேற்றதையே மிகப்பெரிய வெற்றியாக கருத வேண்டும் என்றார். அழகப்பா பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் பேராசிரியர் ராஜாராம் மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டு ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். போட்டிகளில் முதலிடத்தை பெற்ற தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கல்லூரிக்கும், 2-வது இடம் பெற்ற வித்யாகிரி கல்லூரி அணிகளுக்கும் துணைவேந்தர் வெற்றி கோப்பைகளை வழங்கி பாராட்டினார். முடிவில் ஒருங்கிணைப்பாளர். இலங்கேஸ்வரன் நன்றி கூறினார்.