கலைஞரின் வேளாண் வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம்


கலைஞரின் வேளாண் வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம்
x

போலகம் ஊராட்சியில் கலைஞரின் வேளாண் வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம் நடந்தது.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

திருமருகல் ஒன்றியம் போலகம் ஊராட்சியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம் நடந்தது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் பவுஜியாபேகம் அபுசாலி தலைமை தாங்கினார். திருமருகல் வட்டார தோட்டக்கலை உதவி அலுவலர் செல்லபாண்டியன், வேளாண்மை உதவி அலுவலர் பவித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்..இதில் 20 பயனாளிகளுக்கு தோட்டக்கலைத்துறை சார்பில் காய்கறி விதைகளும், 15 பயனாளிகளுக்கு வேளாண்மை துறை சார்பில் பாறை, மண்வெட்டி உள்ளிட்ட வேளாண்மை உபகரணங்களும் இலவசமாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஊராட்சி செயலாளர் சாமிநாதன், ஊராட்சி மன்ற துணை தலைவர், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.



Next Story