கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம்
புதுக்குளம், நெடுங்குளத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம் நடந்தது.
தட்டார்மடம்:
புதுக்குளம், நெடுங்குளத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.
புதுக்குளம் ஊராட்சியில் நடந்த முகாமுக்கு ஊராட்சித் தலைவர் பாலமேனன் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு தலைவர் ஜெயபதி, வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி வேளாண்மை அலுவலர் கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். விதைச்சான்று அலுவலர் விக்டர் சுபராஜா, உதவி பொறியாளர் கீர்த்தனா ஆகியோர் திட்டம் குறித்து விளக்கி கூறினர். இதில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எபனேசர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பட்டத்தி, கிராம நிர்வாக அலுவலர் சத்தியராஜ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஊராட்சி செயலர் மணிகண்டன் செய்திருந்தார்.
நெடுங்குளம் ஊராட்சியில் நடந்த முகாமுக்கு ஊராட்சி தலைவர் சகாயஎல்பின் தலைமை தாங்கினார். உதவி வேளாண்மை அலுவலர்கள் மணிபாண்டி திட்டம் குறித்து விளக்கி கூறினார். இதில் மண்டல துணை தாசில்தார் மைக்கேல், கிராம நிர்வாக அலுவலர் சிவகாமி, கால்நடை உதவி மருத்துவர் தாமோதரன், கலுங்குவிளை கூட்டுறவு சங்க அலுவலர் சுப்பிரமணியன், கிராம செவிலியர் பெரில்மேரி, மின்வாரிய அலுவலர் மெய்க்கும் பெருமாள், மகளிர் திட்ட மேலாளர் ரோஸ்லீன், ஒன்றிய பணி மேற்பார்வையாளர் ஜெய்சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஊராட்சி செயலர் ராஜா செய்திருந்தார்.