16 மாநிலங்களை சேர்ந்த கலைஞர்கள் பங்கேற்பு


16 மாநிலங்களை சேர்ந்த கலைஞர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 26 Jun 2023 12:15 AM IST (Updated: 26 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறையில் கோடை விழா 3 நாட்கள் நடந்தது. இதில் 16 மாநிலங்களை சேர்ந்த கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் கோடை விழா 3 நாட்கள் நடந்தது. இதில் 16 மாநிலங்களை சேர்ந்த கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

கோடை விழா

மயிலாடுதுறையில் இந்திய கலாசாரத் துறை அமைச்சகத்தின் தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையம் மற்றும் மயிலாடுதுறை சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை இணைந்து நடத்தும் 2023-ம் ஆண்டுக்கான கோடை விழா கலைநிகழ்ச்சி 23-ந்தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்று வந்தது. 3 நாட்கள் நடைபெற்ற விழாவை தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மைய அதிகாரி நாதன் மற்றும் சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை பரணிதரன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.

270 கலைஞர்கள் பங்கேற்பு

இதில் தமிழ்நாடு, ராஜஸ்தான், மேற்குவங்கம், உத்தரகாண்ட், ஆந்திரபிரதேசம், கேரளா, கர்நாடகா, குஜராத், தெலுங்கானா, ஒடிசா, மராட்டியம், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், உத்தரபிரதேசம், ஜார்கண்ட், கோவா ஆகிய 16 மாநிலங்களில் இருந்து 270 கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

முதல்நாள் நிகழ்ச்சியில், ராஜஸ்தான் மாநிலத்தின் பில் பழங்குடியின பெண்கள் கூடி ஆடும் கூமர் என்ற நாட்டுப்புற நடனம், ஜார்கண்ட் மாநிலத்தில் பரவலாக அங்கீகரிக்கப்பட்ட தென்கிழக்கு பிராந்தியத்தின் சரைகேலா மற்றும் கிழக்கு சிங்பூம் மாவட்டங்களின் முகமூடி நடனமான சாவ் நடனம் நடைபெற்றது.

கரகம், காவடி ஆட்டம்

மேலும் ஆந்திர மாநிலத்தின் மழை தெய்வமான கங்கம்மாவை மகிழ்விப்பதற்காக தெய்வத்தை போற்றும் வகையில் அனைத்து கிராம திருவிழாக்களிலும் ஆடப்படும் தப்பேட்டா குல்லு நடனம், தெலுங்கானா மாநிலத்தின் ஓக்கு டோலு நடனம், தமிழ்நாட்டின் நாட்டுப்புற நடனமான கரகம், காவடி ஆட்டம் உள்ளிட்ட பல்வேறு நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனை திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு கண்டு ரசித்தனர்.


Next Story