கலைஞரின் வருமுன்காப்போம் மருத்துவ முகாம்


கலைஞரின் வருமுன்காப்போம் மருத்துவ முகாம்
x

கலைஞரின் வருமுன்காப்போம் மருத்துவ முகாம்

தஞ்சாவூர்

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம் முடச்சிக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. முகாமை

சேதுபாவாசத்திரம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராமலிங்கம் தொடங்கி வைத்தார். முகாமில் டாக்டர்கள் அடங்கிய மருத்துவக்குழுவினர் பொதுமக்களை பரிசோதித்து மருத்துவ ஆலோசனை வழங்கினர். இதில் 1,082 பொதுமக்கள் கலந்து கொண்டனர். 21 பேர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பரிந்துரை செய்யப்பட்டனர். முகாமில் ஊராட்சி மன்ற தலைவர் சக்கரவர்த்தி, துணைத்தலைவர் நீலகண்டன் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், சுகாதார ஆய்வாளர்கள், சுகாதாரச்செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் சுகாதார ஆய்வாளர் பாஸ்கர் நன்றி கூறினார்.


Related Tags :
Next Story