கலை இலக்கிய பெருமன்ற கூட்டம்
கலை இலக்கிய பெருமன்ற கூட்டம்
நாகப்பட்டினம்
வேதாரண்யத்தில் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மன்ற தலைவர் குழந்தைவேலு தலைமை தாங்கினார்.
அமைப்பின் குழு உறுப்பினர் அரு.கந்தசாமி, தமிழ்த்துறை ஆய்வு மாணவி சுகன்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கூட்டத்தில் மாவட்டத்தலைவர் தட்சிணாமூர்த்தி, மாவட்டச்செயலாளர் அம்பிகாபதி மற்றும் பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் நலிந்து வரும் நாட்டுப்புறக்கலைஞர்களை ஒருங்கிணைத்து தமிழக அரசின் நாட்டுப்புறக்கலைஞர்கள் நலவாரியத்தை மேம்படுத்த வேண்டும், வேதாரண்யம் நூலகத்துக்கு புதிய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் கட்டும் பணியை விரைந்து தொடங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Related Tags :
Next Story