விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
உரிகம், கோட்டையூர் கிராமங்களில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது.
கிருஷ்ணகிரி
தேன்கனிக்கோட்டை
தேன்கனிக்கோட்டை தாலுகா உரிகம், கோட்டையூர் கிராமங்களில் வனத்துறை சார்பில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது. உரிகம் வனச்சரகர் வெங்கடாசலம் தலைமை தாங்கினார். உதவி வன பாதுகாவலர் ராஜமாரியப்பன் கலை நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் வனப்பகுதியில் தீ விபத்து ஏற்படுவதை தடுக்க வேண்டும். வன விலங்குகள் வேட்டையாடுவதை கைவிட வேண்டும். உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கிகளை வனத்துறையினரிடம் ஒப்படைக்க வேண்டும் என தர்மபுரியை சேர்ந்த கலைக்குழுவினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கலை நிகழ்ச்சியை வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
Related Tags :
Next Story