ஆருத்ரா, ஹிஜாவு மோசடி - ஐ.ஜி விளக்கம்
ஆருத்ரா, ஹிஜாவு மோசடி குறித்து பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை,
ஆருத்ரா, ஹிஜாவு மோசடியில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு ஐ.ஜி. ஆசியம்மாள் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி வழக்கில், 2.2 கிலோ தங்கம், 18 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஆருத்ரா கோல்டு நிறுவனத்தின் 120 வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக 10,000 பேர் புகார் அளித்துள்ளனர்.
89,000 பேரிடம் பணம் பெற்று ஹிஜாவு நிறுவனம் மோசடியில் ஈடுபட்டுள்ளது. சோதனையில் ரூ.3.34 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஹிஜாவு மோசடி வழக்கில் இதுவரை 52 குற்றவாளிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.41 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்கள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story