ஆறுமுகநேரியில்தொழிலாளிக்கு கத்திக்குத்து
ஆறுமுகநேரியில்தொழிலாளியை மதுபோதையில் கத்தியால் குத்திய நண்பரை போலீசார் கைது செய்தனர்.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி வடக்கு சுப்பிரமணியபுரம் சித்திரைப் பாண்டியன் மகள் பொன் துரை (வயது 52). தொழிலாளி. அதே பகுதியைச் சேர்ந்தவர் சவுந்திரபாண்டியன் மகன் பொன்ராஜ் (56). இருவரும் நண்பர்கள். அடிக்கடி இருவரும் சேர்ந்து மது குடிப்பது வழக்கம் என கூறப்படுகிறது.
வழக்கம் போல் நேற்றுமுன் தினம் சுப்பிமணியபுரம் பகுதியில் இருவரும் மது குடித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது திடீரென இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இது முற்றியதில் பொன் துரையை பொன்ராஜ் கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் காயமடைந்த பொன்துரையின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்துள்ளனர். இதை பார்த்தவுடன் பொன்ராஜ் தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. படுகாயங்களுடன் இருந்த பொன்துரையை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் ஆறுமுகநேரி சப்- இன்ஸ்பெக்டர் அமலோற்பவம் வழக்கு பதிவு செய்து பொன்ராஜை கைது செய்து விசாரித்து வருகிறார்.