ஆறுமுகநேரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு இலவச சைக்கிள்


ஆறுமுகநேரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில்   மாணவிகளுக்கு இலவச சைக்கிள்
x
தினத்தந்தி 1 Oct 2022 12:15 AM IST (Updated: 1 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆறுமுகநேரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை சுப்புலட்சுமி தலைமை தாங்கினார். ஆறுமுகநேரி நகரப்பஞ்சாயத்து தலைவி கலாவதி கல்யாணசுந்தரம், துணைத் தலைவர் அ.கல்யாண சுந்தரம், மற்றும் பள்ளியின் பெற்றோர்- ஆசிரியர் சங்க தலைவரும், ஆதவா தொண்டு நிறுவனத்தின் நிறுவனருமான ஜெ.பால குமரேசன் ஆகியோர் கலந்துகொண்டு மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினார்கள்.


Next Story