ஆறுமுகநேரி அரசு மகளிர் பள்ளி உடற்கல்வி ஆசிரியை சாதனை
தேசிய மூத்தோர் தடகள போட்டியில் ஆறுமுகநேரி அரசு மகளிர் பள்ளி உடற்கல்வி ஆசிரியை சாதனை படைத்துள்ளார்.
தூத்துக்குடி
ஆறுமுகநேரி:
தேசிய மூத்தோர் தடகளப்போட்டி மேற்கு வங்காளம் கொல்கத்தாவில் நடைபெற்றது. இதில் தமிழகத்தில் இருந்து 300-க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
போட்டியில் தமிழகத்தின் சார்பில் ஆறுமுகநேரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி உடற்பயிற்சி ஆசிரியை பட்டு டால்மீ கலந்து கொண்டார். இவர் 80 மீட்டர், 300 மீட்டர் தடை தாண்டி ஓட்டங்களில் முதலிடத்தை பிடித்து, தங்கப்பதக்கம் வென்றார். சாதனைபடைத்த ஆசிரியை பட்டுடால்மீக்கு நேற்று காலை தலைமை ஆசிரியை சுப்புலட்சுமி, பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் பால குமரேசன், மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி பொன்னாடை அணிவித்தனர்.
மேலும் இவர் பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெறும் ஆசிய மூத்தோர் தடகள போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளார்
Related Tags :
Next Story