ஆறுமுகநேரி அரசு மகளிர் பள்ளியில் பாலியல் விழிப்புணர்வு முகாம்
ஆறுமுகநேரி அரசு மகளிர் பள்ளியில் பாலியல் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
தூத்துக்குடி
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கான பாலியல் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு பள்ளியின் பெற்றோர்- ஆசிரியர் சங்கத் தலைவர் பாலகுமரேசன் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை சுப்புலட்சுமி வரவேற்று பேசினார்.
நிகழ்ச்சியில் பாலியல் விழிப்புணர்வு பற்றிய அரசு சட்ட விதிகள் பற்றியும், மாணவிகளின் கடமை பற்றியும் அரசு குற்றவியல் வக்கீல்கள் சாத்ராக், பாரிகண்ணன், ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில், 10-ம் வகுப்பு மாணவி ஜெயராணி ஆகியோர் பேசினர். ஆசிரியை தேவமலர் செல்வி நன்றி கூறினார். ஆறுமுகநேரி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் அமலோற்பவம் மற்றும் ஆசிரியைகள், மாணவிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story