ஆறுமுகநேரி புனித அன்னம்மாள் ஆலய திருவிழா
ஆறுமுகநேரி புனித அன்னம்மாள் ஆலய திருவிழா நடைபெற்றது.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி புனித அன்னம்மாள் ஆலய திருவிழா கடந்த 5-ந்தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து 10 நாட்கள் காலையில் திருப்பலியும், மாலையில் ஆராதனையும் நடைபெற்றன. 9-ம் நாள் மாலையில் ஆறுமுகநேரி மடத்துவிளையில் உள்ள புனித சவேரியார் ஆலயத்தில் இருந்து புனித அன்னம்மாள் சொரூபம் தாங்கிய சப்பர பவனி நடந்தது. ஆலயம் வந்தடைந்தவுடன், அங்கு மாலையில் ஆராதனை நடைபெற்றது. இதனை ஆறுமுகநேரி பங்குத்தந்தை அலசியஸ் அடிகளார், தூத்துக்குடி அருமை நாதன் அடிகளார், பிரபு அடிகளார் நிறைவேற்றினர்.
தொடர்ந்து மாலையில் ஆராதனைக்கு பின்பு மீண்டும் சப்பரபவனி மடத்துவிளை புனித சவேரியார் ஆலயம் சென்றடைந்தது. 10-ம் நாள் காலையில் ஆலயத்தில் திருவிழா ஆடம்பர கூட்டு திருப்பலி நடைபெற்றது. இதனை மறை வட்ட தலைமை குரு ஜான் செல்வம் அடிகளார், ஆறுமுகநேரி பங்குச்சந்தை அலாசியஸ் அடிகளார் ஆகியோர் இணைந்து நடத்தினா். இதில் ஆறுமுகநேரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த கிறிஸ்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.