ஆறுமுகநேரியில்ரெயில் நிலைய வளர்ச்சிகுழுஆலோசனை கூட்டம்


ஆறுமுகநேரியில்ரெயில் நிலைய வளர்ச்சிகுழுஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 30 Dec 2022 12:15 AM IST (Updated: 30 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆறுமுகநேரியில்ரெயில் நிலைய வளர்ச்சிகுழு ஆலோசனை கூட்டம் நடந்தது.

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரி ரெயில் நிலைய வளர்ச்சி குழு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆறுமுகநேரி ரெயில்வே வளர்ச்சி குழு தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் தங்கமணி முன்னிலை வகித்தார். அமிர்தராஜ் வரவேற்றார், முருகன் நன்றி கூறினார். கூட்டத்தில் நெல்லையில் இருந்து திருச்செந்தூர் வரை மின்சார ரெயில் இயக்குவதற்கு துரித நடவடிக்கை எடுத்துவரும் ரெயில்வே நிலைய அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. ஆறுமுகநேரி ரெயில்வே நிலைய பிளாட்பாரத்தை விரிவுபடுத்த வேண்டும், ரெயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. நெல்லை-திருச்செந்தூர் ரெயில் போக்குவரத்து தொடங்கி, வரும் பிப். 23-ந் தேதி நூறாண்டு நிறைவடைகிறது. அதனை முன்னிட்டு நூற்றாண்டு விழா கொண்டாடுவது என்றும், திருச்செந்தூரில் பிட் லைன் ஒன்றும் அமைக்க வேண்டும், 24 பெட்டிகளுடன் ரெயிலை நிறுத்தும் அளவிற்கு பிளாட்பாரத்தின் நீளத்தை அதிகரிக்க வேண்டும்.

திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு நேரடி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story