ஆறுமுகநேரியில்பொதுமக்கள் திடீர் சாலைமறியல்
ஆறுமுகநேரியில் பொதுமக்கள் திடீர் சாலைமறியல் போராட்டம் நடத்தினர்.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி ரெயில் நிலையம் அருகிலுள்ள செல்வராஜபுரம் பகுதியிலுள்ள குப்பை மேட்டில் நேற்று மாலையில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது. இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனடியாக தீயை அணைத்து புகையிலிருந்து இப்பகுதி மக்களை காப்பாற்ற வேண்டும், குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் வந்து தீயை அணைத்தனர். மேலும் ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பேச்சுவார்த்தை நடத்தினார். சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து குப்பை மேட்டை விரைவாக அகற்ற நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தார். இதை தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.