ஆறுமுகநேரியில் இந்து மக்கள் கட்சி கூட்டம்


ஆறுமுகநேரியில்  இந்து மக்கள் கட்சி கூட்டம்
x
தினத்தந்தி 13 Dec 2022 12:15 AM IST (Updated: 13 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆறுமுகநேரியில் இந்து மக்கள் கட்சி கூட்டம் நடந்தது.

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரி சோமநாத சுவாமி கோவில் வளாகத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட இந்து மக்கள் கட்சி செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆறுமுகநேரி நகர தலைவர் மந்திரமூர்த்தி தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட தலைவர் இசக்கி முத்து, அனுமன் சேனா கட்சி அமைப்பு தெற்கு மாவட்ட அமைப்பாளர் தங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில பொது செயலாளர் ஐ.ரவிகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார்

கூட்டத்தில் இந்துக்களின் புனித ஸ்தலமான காசி, மதுரா, ஆகிய இடங்களை மீட்பதற்கு மத்திய அரசு சிறப்பு சட்டம் கொண்டு வர வேண்டும் உட்பட தீர்மானங்கள். நிறைவேற்றப்பட்டது.


Next Story