ஆறுமுகநேரியில் சைவ வேளாளர் சங்கநிர்வாகிகள் கூட்டம்


ஆறுமுகநேரியில்   சைவ வேளாளர் சங்கநிர்வாகிகள் கூட்டம்
x
தினத்தந்தி 28 Nov 2022 12:15 AM IST (Updated: 28 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆறுமுகநேரியில் சைவ வேளாளர் சங்கநிர்வாகிகள் கூட்டம் நடந்தது.

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

தமிழ்நாடு சைவ வேளாளர் சங்கத்தின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் ஆறுமுகநேரியில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் லட்சுமணன் தலைமை தாங்கினார். ஆறுமுகநேரி சங்கத் தலைவர் சங்கரலிங்கம், விளாத்திகுளம் தலைவர் பாரதி, பேரூரணி தலைவர் சுப்பிரமணியம் ஆகிய முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞர் பேரவை தலைவர் ராம்குமார் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட சங்கத்தின் 40-ஆம் ஆண்டு விழாவை கொண்டாட தனி கமிட்டி அமைப்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட செயலாளர் பாலன், மாவட்ட பொருளாளர் குப்புசாமி, மாவட்ட இளைஞர் பேரவை தலைவர் கண்ணன், ஆத்தூர் சங்க தலைவர் கண்ணன், காயல்பட்டினம் தலைவர் கண்ணன், பேயன்விளை தலைவர் இளையபெருமாள், திருச்செந்தூர் நகர தலைவர் ஆனந்த ராமச்சந்திரன், தூத்துக்குடி கீழூர் சங்க தலைவர் காளியப்பன், ஸ்ரீவைகுண்டம் தலைவர் திருவாழ்வாரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story