ஆறுமுகநேரி சோமநாத சுவாமி கோவிலில் திருக்கல்யாண விழா தொடக்கம்


ஆறுமுகநேரி  சோமநாத சுவாமி கோவிலில் திருக்கல்யாண விழா தொடக்கம்
x
தினத்தந்தி 22 Oct 2022 12:15 AM IST (Updated: 22 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆறுமுகநேரி சோமநாத சுவாமி கோவிலில் திருக்கல்யாண விழா தொடங்கியது.

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

திருவாடுதுறை ஆதீனத்துக்கு பாத்தியப்பட்ட ஆறுமுகநேரி சோமசுந்தரி சமேத சோமநாத சுவாமி கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண கால் நாட்டு விழா நடைபெற்றது. தொடர்ந்து முகூர்த்த காலுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மண்டபகபடிதாரரும் ஆறுமுகநேரி நகர் நல மன்ற தலைவருமான பி.பூபாலராஜன், கோவில் மணியம் சுப்பிரமணிய பிள்ளை, கோவில் பக்தஜன சபை செயலாளர் எஸ். ஹரி கிருஷ்ணன், தொழிலதிபர் அசோக் குமார் தெரிசை ஐயப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர். மாலையில் அம்பாள் சுவாமி திருவீதி உலாவும் நடைபெற்றது. தொடர்ந்து பத்து நாட்களும் சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடைபெற்று மாலையில் அம்பாள் சுவாமி திருவீதி உலா நடைபெறும்.


Next Story