அருந்ததி நாகமுத்து மாரியம்மன் கோவில் திருவிழா


அருந்ததி நாகமுத்து மாரியம்மன் கோவில் திருவிழா
x

நாகூர் அருந்ததி நாகமுத்து மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது.

நாகப்பட்டினம்

நாகூர்:

நாகூர் வடக்கு பால் பண்ணைச்சேரி தெத்தி புதுசாலையில் அருந்ததி நாகமுத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி பக்தர்கள் பால்குடம், கரகம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதைதொடர்ந்து நேற்று காலை பெரியாச்சி அம்மன், மதுரை வீரன் சாமிகளுக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


Next Story