அருப்புக்கோட்டை வாலிபருக்கு ஆயுள் தண்டனை


அருப்புக்கோட்டை வாலிபருக்கு ஆயுள் தண்டனை
x

தொழிலாளி கொலை வழக்கில் அருப்புக்கோட்டை வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோா்ட்டு தீர்ப்பு அளித்தது.

விருதுநகர்

தொழிலாளி கொலை வழக்கில் அருப்புக்கோட்டை வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோா்ட்டு தீர்ப்பு அளித்தது.

தொழிலாளி

அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தை சேர்ந்தவர் முருகன் என்ற மகேஷ் (வயது 34). கட்டிட தொழிலாளியான இவர் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் அருப்புக்கோட்டை புளியம்பட்டியை சேர்ந்த பாண்டி என்ற சரவணகுமார் (35) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

இந்நிலையில் பாண்டி, மகேசிடம் மது வாங்கி வரச் சொல்லி குடித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை மகேசின் உறவினர் கண்டித்துள்ளார்.

ஆயுள் தண்டனை

இதனால் பாண்டிக்கும், மகேசுக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 30.9. 2017-ந் தேதியன்று பாண்டி, மகேசை கத்தியால் குத்தி கொலை செய்தார்.

இதுதொடர்பாக அருப்புக்கோட்டை போலீசார் பாண்டியை கைது செய்து வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த விருதுநகர் மாவட்ட கூடுதல் நீதிபதி ஹேமந்த் குமார் குற்றம் சாட்டப்பட்ட பாண்டிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.


Next Story