உடன்குடியில் பொதுமக்களுக்கு இடையூறாக நடமாடிய பன்றிகள் பிடிப்பு
உடன்குடியில் பொதுமக்களுக்கு இடையூறாக நடமாடிய பன்றிகள் பிடித்து அப்புறப்படுத்தப்பட்டன.
தூத்துக்குடி
உடன்குடி:
உடன்குடி பேரூராட்சி பகுதியில் பன்றிகள் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக நடமாடி வருவதாக பேரூராட்சி நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார்கள் கூறப்பட்டு வந்தது. இதை தொடர்ந்து பேருராட்சி மன்ற தலைவர் ஹீமைரா அஸ்ஸாப் கல்லாசி, துணைத் தலைவர் மால் ராஜேஷ் மேற்பார்வையில் செயல் அலுவலர் பாபு தலைமையில் உடன்குடி பேருராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித் திரிந்த பன்றிகள் பிடிக்கப்பட்டு அப்புறப்படுத்தபட்டன.
Related Tags :
Next Story