கேக்குகளில் பூஞ்சை தொற்று கண்டுபிடிக்கப்பட்டதால், முள்ளக்காட்டில் பேக்கரி உரிமம் தற்காலிக ரத்து


கேக்குகளில் பூஞ்சை தொற்று கண்டுபிடிக்கப்பட்டதால், முள்ளக்காட்டில் பேக்கரி உரிமம் தற்காலிக ரத்து
x
தினத்தந்தி 27 Sept 2023 12:15 AM IST (Updated: 27 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கேக்குகளில் பூஞ்சை தொற்று கண்டுபிடிக்கப்பட்டதால், முள்ளக்காட்டில் பேக்கரி உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.

தூத்துக்குடி

ஸ்பிக்நகர்:

முள்ளக்காடு பகுதியில் உள்ள ஆதிரா பேக்கரி கடையில் நேற்று தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் மாரியப்பன் ஆய்வு மேற்கொண்டார். அங்கு ஞாயிறு அன்று தயாரிக்கப்பட்ட கேக்குகளில் பூஞ்சைத் தொற்று உறுதிசெய்யப்பட்டது. உடனடியாக அந்த பேக்கரியின் உணவு பாதுகாப்பு உரிமத்தை தற்காலிகமாக இடைக்கால ரத்து செய்யப்படுவதாக, உரிமையாளரிடம் தெரிவித்து, வணிகத்தினை உடனே நிறுத்த உத்தரவிடப்பட்டது. மேலும், அங்கிருந்த 5 லிட்டர் நெய், 9 கிலோ கேக்குகளும், 2½ லிட்டர் மில்க் ஷேக்குகளும் பறிமுதல் ெசய்யப்பட்டன. நெய்யை உணவு பகுப்பாய்வு செய்வதற்காக, பகுப்பாய்வுக்கூடத்திற்கு விரைவில் அனுப்பப்படும் என்று உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் தெரிவித்தார்.


Next Story